Breaking News
அமர்நாத் தாக்குதல்: முன்னரே எச்சரித்திருந்த உளவுத்துறை

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் முன்னரே எச்சரித்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆலோசனை:
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமர்நாத் யாத்திரை துவங்கும் முன்னர் பல மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய உளவு பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதில், இந்த வருடம் அமர்நாத் யாத்திரையின் போது 150 யாத்ரீகர்களையும், 100 போலீசாரையும் கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என ஆனந்த்நாக் மாவட்ட எஸ்.பி., கூறியிருந்தார். இதன் மூலம் நாடு முழுவதும் மதரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் உறுதி செய்யமுடியாவிட்டாலும், தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், உஷாராகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பயங்கரவாதிகளை திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்பட்டது.
இந்த தகவல், அமர்நாத் யாத்திரைக்கு அதிகமாக மக்கள் வரும் அரியானா, பஞ்சாப், காஷ்மீர், இமாச்சல பிரதேச மாநில அரகளுசுக்கு தெரிவிக்கப்பட்டது. அம்மாநிலபுலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நேரத்தை தாண்டி
அதிகாரி ஒருவர் கூறுகையில், தாக்குதலுக்கு உள்ளான பஸ் மாலை 4.40 மணியளவில் ஸ்ரீநகரிலிருந்து கிளம்பியது. அங்கிருந்து 250 கி.மீ., தூரத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றது.இந்த கோவிலை அடைய 6 மணி நேரம் ஆகும். பஸ் 50 கி.மீ., தூரம் தாண்டிய பின்னர் டயர் பஞ்சரானது. அதனை மாற்றிய பின்னர் 1 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் மாலை முதல் 7 மணி வரை வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பர். அந்த நேரத்தில் மட்டும் தான், இந்த வழியாக அமர்நாத் யாத்திரைக்கு பஸ்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குஜராத்தை சேர்ந்த அந்த பஸ் டயர் பஞ்சர் காரணமாக குறிப்பிட்ட நேரத்தை விட 1 மணிநேரம் தாமதமாக கிளம்பியது. இது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பாக அமைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிகளை மீறி…
சி.ஆர்.பி.எப்., டிஜி பட்நாகர் கூறுகையில், அந்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் விதிகளை மீறியுள்ளனர். அமர்நாத் யாத்திரை செல்ல பதிவு செய்யவில்லை. பாதுகாப்பு பணிக்கு போலீசாரை அழைத்து செல்லவில்லை. அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் பின்பற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் வாகனங்கள்:
அமர்நாத் யாத்திரைக்கு காஷ்மீர் அரசு சார்பில் பஸ் வசதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்சிற்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஆனால், குஜராத்தை சேர்ந்த யாத்ரீகர்கள் வந்தது தனியார் பஸ் என்பதால், மற்ற தனியார் பஸ்களை போல் அது தேசிய நெடுஞ்சாலையில் சென்று வந்துள்ளது. யாத்திரை வரும் 90 சதவீதம் பேர் தனியார் வாகனங்களில் வருகின்றனர். தனியார் வாகனங்களை எடுக்க முடியாதவர்கள் மட்டுமே அரசு பஸ்சில் யாத்திரை செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. யாத்திரை செல்பவர்கள் தங்களது சொந்த செலவில் ஆடம்பர வாகனங்களிலும் வருகின்றனர். அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் சுற்றுலாவில் ஒரு அங்கமாக உள்ளது. இரவில் பயணம் குறித்து காஷ்மீர் அரசு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. யாத்ரீகர்கள் விருப்பப்பட்டே இரவில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.