Breaking News
‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில் நிலையம் மும்பையில் அசத்தல் திட்டம்

மும்பை, முழுவதும் பெண்களே பணிபுரியும், நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை, மும்பையில் உள்ள, மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன்
பெற்றுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை அருகேயுள்ள மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும், பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தனர்.
தற்போது, இந்த ரயில்வே ஸ்டேஷன், மகளிர் சிறப்பு ரயில்வே ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதையடுத்து, ஏற்கனவே இருந்த ஆண் ஊழியர்களுக்கு பதில், பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா கூறியதாவது:ரயில்வேயில் சேர்ந்து, 25 ஆண்டு அனுபவத்தில், முதல் முறையாக, பெண் ஊழியர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவரும் இணைந்து, சிறப்பாக பணியாற்றி வருகிறோம்; இது, புது அனுபவமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.