ஜெயலலிதா மீதான வழக்கு முடித்து வைப்பு
ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, அவர் இறந்ததையடுத்து காலாவதியான வழக்காக எடுத்துக்கொண்டு முடித்து வைக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இரு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் விதிமுறை உள்ளது என கூறி குப்புசாமி எம்.பி., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவ்வழக்கு, ஜெயலலிதா இறந்துவிட்டதால், இவ்வழக்கு காலாவதியாகிவிட்டது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.