Breaking News
ஏ பட இமேஜை மாற்ற போராடும் நிக்கி

ஹீரோயினாக நடிக்கும் பல நடிகைகள் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் குத்து பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகின்றனர். நிக்கி கல்ராணியை பொறுத்தவரை தமிழில் கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்திலும் அவர் நடித்திருந்தார். அடல்ட் காமெடி படமாக உருவான இப்படத்தில் கவுதம் கார்த்திக் நடித்திருந்தார். இப்படத்தில் ஏ வகை வசனங்களை நிக்கி பேசினார். இதையடுத்து அவருக்கு ஏ பட நடிகை என்று கோலிவுட்டில் முத்திரை விழுந்தது. இதுபற்றி அவரிடம் ஏற்கனவே கேட்டபோது வழக்கமாக நடிக்கும் படங்கள்போல்தான் இப்படத்திலும் நடித்துள்ளேன் என்று சொல்லி சமாளித்தார்.
கவுதம் கார்த்திக் மற்றொரு ஏ பாணி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’படத்தில் நடிக்கிறார். இப்படத்திலும் நிக்கி கல்ராணிக்கு நடிக்க அழைப்பு வந்தது. அதேபோல் மேலும் சில அடல்ட் காமெடி படங்களிலும் கால்ஷீட் கேட்கப்பட்டது. தன் மீது அடல்ட் காமெடி நடிகை முத்திரை குத்தப்படுவதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார் நிக்கி. அப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டதுடன், தன் மீதான ஏ பட முத்திரையை நீக்க போராடிக்கொண்டிருக்கிறார். இதுபற்றி நிக்கி கூறும்போது,’தற்போது கலகலப்பு 2ம் பாகம் படத்தில் நடிக்கிறேன். இது நகைச்சுவை பின்னணியிலான படம். இதன் மூலம் என் மீது படிந்திருக்கும் ஏ பட இமேஜ் மாறிவிடும்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.