Breaking News
ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக காஜல் அகர்வால்

ஜீன்ஸ், எந்திரன், ராவணன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இருவர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். திருமணத்துக்கு பிறகு ஒதுங்கியிருந்தவர் கடந்த 2 வருடத்துக்கு முன் மீண்டும் நடிக்க வந்தார். இதையடுத்து தமிழ் படத்தில் அவரை நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சி மேற்கொண்டார். பேச்சுவார்த்தை நடந்தநிலையில் அந்த திட்டம் டிராப் ஆனது.

ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என பல்வேறு ஹீரோக்களுடன் பணியாற்றி வெற்றி படங்களை வழங்கியவர் டைரக்டர் பி.வாசு. சமீபத்தில் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை இயக்கினார். இப்படத்தையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை இயக்க முடிவு செய்தார்.

அதற்காக ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்வதற்காக அவரை சந்தித்தார். ஆனால் அந்த தகவல் முன்னதாக பரவியதால் திட்டம் ஈடேறவில்லை. தற்போது ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்ய எண்ணிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.