Breaking News
பத்திரிகை சுதந்திரம் மக்கள் நலனுக்காக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி

சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றார். நாளிதழ்கள் செய்திகளை மட்டும் இல்லாமல் தொலைநோக்கு சிந்தனையையும் அளிக்கிறது என்று அவர் கூறினார். தினகரன் நாளிதழ் நிருபர் மோகன் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்தார். கையால் தயாரித்த காகிதத்தில் அச்சடித்து தினத்தந்தி முதலில் வெளியானது என்றும் அவர் கூறினார்.

பத்திரிகை சுதந்திரம் மக்கள் நலனுக்காக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நாளிதழ்களை தனியார் நடத்தினாலும் பொதுநலனுக்காக அவை செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்திய மொழிகளில் வந்த பத்திரிகைகளை கண்டு ஆங்கிலேயர்கள் அச்சம் அடைந்தனர் எனவும் அரசு நிர்வாகத்தின் தூதுவராக நாளிதழ்கள் செயல்படுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

பல்வேறு விதங்களில் ஒவ்வொருவரும் செய்திகளை அலசி ஆராய்கின்றனர் என்று  கூறினார். மேலும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி ஜனநாயகத்துக்கு நல்லது என்று மோடி கூறினார். பெரும்பாலான நாளிதழ்கள் அரசியலை மையப்படுத்தி செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார். பொதுமக்கள் பிரச்சனைகளை நாளிதழ்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் ஊடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் பிரதமர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.