Breaking News
ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை: ஜெயா டிவி சிஇஒ விவேக்
போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் இளவரசியின் மகள் ஷகிலாவை போயஸ் கார்டன் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, போயஸ்கார்டனுக்கு ஜெயா டிவி சீஇஓ விவேக் அவசர அவசரமாக வந்தார். இதற்கிடையில், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துகொண்டு வெளியேறினார்.
வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போயஸ் தோட்டத்தில் அம்மாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் வாரண்டுடன் வந்து ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் 2 பென் டிரைவ்கள், ஒரு லேப்டாப்  மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், எனது சகோதரி ஷகீலாவை அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த இடத்துக்கு வந்த துன்பத்தை யாரும் தட்டிக் கேட்கவில்லை”இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.