Breaking News
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் அதிர்ச்சி தோல்வி

ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் சுஷிஷ்குமார் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மல்யுத்தத்தின் முதல் சுற்றில் (74 கிலோ எடைப்பிரிவு) ஆடம் பாட்ரிரோவை சந்தித்த சுஷில்குமார் 3–5 என்ற புள்ளி கணக்கில் மண்ணை கவ்வினார்.

மல்யுத்தத்தில் தொடக்க ரவுண்டுகளிலேயே தோல்வி அடைந்தாலும் பதக்கம் வெல்ல இன்னொரு வாய்ப்பு உண்டு. அதாவது தங்களது வீழ்த்தும் வீரரும் இறுதி சுற்று வரை முன்னேறினால் சம்பந்தப்பட்ட வீரர் ‘ரிபிசாஜ்’ மூலம் தொடர்ந்து விளையாடி அதிகபட்சமாக வெண்கலப்பதக்கம் வெல்ல முடியும். இந்த வகையிலும் சுஷில்குமாருக்கு அதிர்ஷ்டம் இல்லை. அவரை சாய்த்த ஆடம் பாட்ரிரோவ் கால்இறுதியுடன் அடங்கிப்போனார்.

35 வயதான சுஷில்குமார் ஒலிம்பிக்கில் 2008–ம் ஆண்டில் வெண்கலமும், 2012–ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷில்குமார் கூறுகையில், ‘தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெற்றி, தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. நிச்சயம் சரிவில் இருந்து மீண்டு வருவேன். வயது காரணமாக தளர்ந்து உடல்வலிமையை இழந்துவிட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடல்வலிமையுடன் இல்லாமல் இருந்திருந்தால் இந்த சுற்றில் முழு நேரம் தாக்குப்பிடித்து இருக்கமாட்டேன்.’ என்றார்.

இதே போல் ஆண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் சந்தீப் தோமர் 2–வது சுற்றில் ஈரானின் அட்ரினாஹார்ச்சிடம் தோற்று நடையை கட்டினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.