Breaking News
தொப்பை போலீஸ் வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு

போலீசாரை துல்லா என லந்தடித்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்.
டில்லி போலீசாரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியும் டில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவதுதொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு ‘டிவி’ சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் கெஜ்ரிவால், போலீசார் பற்றி குறிப்பிடும் போது, ‘துல்லா’ ( தொப்பை போலீஸ்) என்ற வார்த்தையில் லந்தடித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அஜய்குமார் தனேஜா என்ற போலீஸ்காரர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடர்ந்தார். அதில் இதுமாதிரியான வார்த்தையை கூறி இருப்பது கவலைக்குரியது. அவர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். , ஜூலை மாதம் நேரில் ஆஜராக, கெஜ்ரிவாலுக்கு, கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது.

கடந்த இரண்டாண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று டில்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் சமர் விஷால் அளித்த தீர்ப்பில், ‘அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் இவ்வழக்கின் மனுதாரரான அஜய் குமார் தனேஜாவை குறிப்பிட்டு ‘துல்லா’ என்னும் வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை. இதனை அவதூறாக பொருள்கொள்ள முடியாது. மனுதாரரின் மனம் காயப்பட்டதாக எந்த சிறப்பான காரணமும் குறிப்பிடப்படவில்லை. இதனை அவதூறு வழக்காக விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கோர்ட் விடுவிக்கிறது என உத்தரவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.