Breaking News
சாரிடான் உட்பட 328 மருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

கடந்த 2016-ம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து இந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன.

இதை விசாரித்த நீதிபதிகள், “மருந்து தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைத்து 349 மருந்துகள் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அதன்படி ஆய்வு செய்து மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் சாரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் அடங்கும். அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.