Breaking News
மத்திய அரசை எதிர்கின்ற துணிவு திமுகவுக்கு இல்லை என்பதை பாரத் பந்த காட்டியது – தம்பித்துரை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கருங்கல்பட்டி, ஜமீன் ஆத்தூர் காலனி, வல்லப்பம்பட்டி, சாமிநாதபுரம், அம்மாபட்டி, சங்கரணாபட்டி, கணவாய், கடம்பங்குறிச்சி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை உறுப்பினருமான தம்பித்துரை மக்களிடம் மனுக்களை கேட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணமே, இன்றைய மத்திய அரசும், முந்தைய மத்திய அரசும் தான் என்றதோடு, வெளிநாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு பெட்ரோல் கொண்டு வரும்போது எக்ஸைஸ் தொகை, கலால் வரி மட்டுமில்லாது செஸ் வரி என்பதை மட்டுமில்லாமல் விலை நிர்ணயிக்கும் உரிமையை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாகவும், முந்தைய காங்கிரஸ், தி.மு.க கூட்டணியின் மத்திய அரசிடமும், தற்போதைய பா.ஜ.க அரசும், அதே கொள்கையை எடுத்துள்ளதாலும், மாநில அரசுகளுக்கு வருவாய் குறைந்துள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு தற்போது தேவை பாரத ரத்னாதான் பாரத் பந்த் தேவை இல்லை. மத்திய அரசை எதிர்கின்ற துணிவு திமுகவுக்கு இல்லை என்பதை பாரத் பந்த காட்டியது. மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை, பாஜக உடன் உறவை புதுப்பிக்கவே ஸ்டாலின் பயணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.