பல்லாவரத்தில் போதிய மருத்துவர் இல்லாத நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
பல்லாவரத்தில் இயங்கிவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறையோடு, அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பல்லாவரம் நகராட்சியில் அரிதாஸ்புரம், ராயப்பேட்டை, ஜமீன் பல்லாவரம் சரோஜினி தெரு, பழைய பல்லாவரம் வைத்தியலிங்கம் ரோடு ஆகிய, 4 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும், 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் சரோஜினி தெரு, வைத்தியலிங்கம் ரோடு சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டனர். தற்போது வரை வேறு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் அரிதாஸ்புரத்தில் உள்ள சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகர் கூறுகின்றனர். மேலும் ராயப்பேட்டை பகுதியில் சுகாதார நிலையம் வாடகை கட்டடத்தில் போதிய வசதிகள் இன்றிச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, “தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாததாலேயே அரசு சுகாதார நிலையத்தை நாடி வருகிறோம்.
மருத்துவர்கள் இல்லாத நேரத்தில் சுகாதார நிலையத்தை நாடி வரும் நோயாளிகள் செவிலியர்களிடம் நோயின் நிலையை கூறி அவர்கள் தரும் மருந்தை வாங்கி செல்கிறோம்.
மேலும் எம்பிபிஎஸ் படித்தவர் கள் செய்ய வேண்டிய பணியை செவிலியர்கள் செய்வது எவ்வகையில் நியாயம். எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றனர்.