Breaking News
கோயம்பேடு பஸ் நிலையத்தில் எம்ஜிஆர் பெயர் பலகை பொருத்தப்பட்டது

கோயம்பேடு பஸ் நிலையத்தில் எம்ஜிஆர் பெயர் பலகை பொருத்தப்பட்டது

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

*சென்னை:*

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.

37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. தினமும் 2 ஆயிரம் பஸ்களையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

இங்கிருந்து தினமும் 573 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பஸ்களுக்காக 6 பிளாட் பாரங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் செல்கின்றன.

தி.மு.க. ஆட்சியின் போது கருணாநிதி இந்த பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். 2002-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மீதும், பிளாட்பார நுழைவாயிலிலும் இந்த பெயர் பலகைகள் உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.