சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.84.64க்கு விற்பனை
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அளித்த அனுமதியை அடுத்து ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.
இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. அதற்கு அடுத்த நாளும் அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் 20ந்தேதி மீண்டும் விலை குறைந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 66 காசு குறைந்து, 85 ரூபாய் 22 காசுக்கு விற்பனை ஆனது.
பெட்ரோல் விலையை போலவே, டீசல் விலையும் கடந்த 18ந்தேதி குறைந்தது. 20ந்தேதியும் விலை குறைந்தே காணப்பட்டது. லிட்டருக்கு 24 காசு குறைந்து, ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இறங்குமுகத்தில் இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்று 4வது நாளாக லிட்டர் ஒன்றுக்கு 26 பைசா குறைந்து ரூ.84.96க்கு விற்பனையானது. இதேபோன்று டீசல் விலை 18 பைசா குறைந்து ரூ.79.51க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று 32 பைசா குறைந்து ரூ.84.64க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை 29 பைசா குறைந்து ரூ.79.22க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து இன்று 5வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.
கடந்த 5 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.46 மற்றும் டீசல் விலை 82 பைசாக்கள் குறைந்து விற்கப்படுகிறது.