Breaking News
டி.என்.ஏ சோதனைக்கு ஜெயக்குமார் தயாரா? – தாமிரபரணியில் புனித நீராடிய தங்க தமிழ்ச்செல்வன் சவால்

*டி.என்.ஏ சோதனைக்கு ஜெயக்குமார் தயாரா? – தாமிரபரணியில் புனித நீராடிய தங்க தமிழ்ச்செல்வன் சவால்*

தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று நெல்லை சென்றுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தாமிரபரணியில் புனித நீராடினர்.

கடந்த வருடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் அப்போது தமிழகத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர்.

அரசு கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதால் இவர்களை அனைவரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் இறுதியில் இரு வேறான கருத்தை தெரிவித்ததால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இதில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் நெல்லையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில்:

` தவறுதலாக எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்துவிட்டோம். 144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடினால் நல்லது நடக்கும் என்பதால் இங்கு வந்துள்ளோம். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. முதல்வரையும் 6 அமைச்சர்களையும் நீக்கிவிட்டு இதே ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். பெண் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். ஆடியோவில் இருக்கும் குரல் என்னுடையது அல்ல என்று ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே தவிர குழந்தை தன்னுடையது இல்லை என்று சொல்லவில்லை. இதனால் ஜெயக்குமார் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். டி.என்.ஏ சோதனை நடத்தி, தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கட்டும். டி.என்.ஏ சோதனைக்கு அவர் தயாரா” எனக் கூறினார். இதையடுத்து 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தங்கள் பக்கம் தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காகவும் தங்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் தாமிரபரணி நதிக்கரையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.