Breaking News
சச்சின், லாராவை போன்று சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலிக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரைப் போன்றே விராட் கோலியும் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறினார்.

இந்தியா வந்துள்ள ஸ்டீவ் வாஹ் இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித் தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் விராட் கோலி ஒரு சிறந்த வீரர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மிகப்பெரிய வெற்றியை நேசிக்கிறார். அதற்காக சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் கிரிக்கெட் மிகவும் விரும்பி விளையாடுகிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப் டன் சச்சின் டெண்டுல்கர், மேற் கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா போன்றே விராட் கோலியும் மிகச் சிறந்த வீரர். மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனாக விராட் கோலி விளங்கி வருகிறார். தற்போதுள்ள வீரர்களில் மிகச் சிறந்த பேட்ஸ் மேனாக அவர் உரு வாகி உள்ளார்.

தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 ஆண்டுகளில் மிகச் சிறந்த அணி என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார். அவர் அப்படி கூறுவதை என்னால் ஏற்க இயல வில்லை. நான் பல்வேறு இந்திய அணிகளுடன் பல காலம் விளை யாடி இருக்கிறேன்.

நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதி கரிக்க ரவி சாஸ்திரி அவ்வாறு கூறி இருக் கலாம் என்று நான் கருது கிறேன். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.

விரைவில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளது.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்குச் சவாலான விஷயமாகும்.

தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக் கும் என்று கருதுகிறேன். இரு அணிகளும் பலமானதாக விளங்குகின்றன.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு பலமானதாக இருக்கிறது. எனவே இந்தத் தொடர் சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.