Breaking News
பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பாஜக ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம்

பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரசும் – பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்காக இரு கட்சிகளும் குல்லிபாய் என்ற பிரசார வீடியோவை வெளியிட்டு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாஜக சமீபத்தில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை குறித்து ‘குல்லி பாய்’ என்ற பிரசார ராப் வீடியோவை ட்வீட் செய்து இருந்தது. வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி சகாப்தத்தின் ஊழல் வழக்குகள் ராப் பாடல்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

வீடியோ பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ‘ஆஷாடி’ கோஷங்களை எழுப்புகிறது. ராபர்ட் வதேராவின் ஊழல் வழக்குகளில் இருந்து நேரு – காந்தி குடும்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இந்த வீடியோ வசனங்களில் காணப்படுகிறது.

While @RahulGandhi will stay up all night wondering what new lies to peddle tomorrow morning, we leave you with this goal for 2019.

Have a happy friday night, people! 🙂 pic.twitter.com/WOXOJ1QPYO

— BJP (@BJP4India) February 8, 2019

இதையடுத்து, காங்கிரஸ் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க.வை விமர்சிப்பதற்காக ‘குல்லி பாய்’ என்ற பிரசார ராப் வீடியோவை வெளியிட்டு உள்ளது. வீடியோ ‘அஷாதி’ என்ற முழக்கத்தோடு தொடங்குகிறது, இது பி.ஜே.பி.யின் ஊழல் நிகழ்வுகளைக் சுட்டிக்காட்டுகிறது. NaMo கட்சி நாட்டைத் தொந்தரவு செய்து வருவதாக வீடியோவில் காட்டப்படுகிறது. ரபேல் ஊழல், வியாபம் ஊழல், வேலைவாய்பின்மை குறித்து அதில் வசனங்கள் இடம்பெற்று உள்ளன. சௌக்கியாடர் சோர் ஹாய் (காவலாளியே திருடுகிறார்) என்று வீடியோவில் அடிக்கடி கூறப்படும் சொல்லாக உள்ளது.
डर के आगे आज़ादी। #Azadipic.twitter.com/WGHw3Q7Ndo

— Congress (@INCIndia) February 8, 2019
.

இந்த இரு கட்சிகளும் தங்கள் மொழியில் தொண்டர்களிடம் எதிர்கட்சியை வசைபாடுவது இது முதல் முறையல்ல. நரேந்திர மோடி ஆட்சி மற்றும் கட்சியின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி, இன்னொரு இசை வீடியோ வெளியிடபட்டு உள்ளது. இந்த வீடியோ # ModiOnceMore என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியிடப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ் இதேபோன்ற வீடியோவை ‘அப்னா டைம் அயியே’ (எங்கள் நேரம் வந்தாச்சு) என்ற பெயரில் பகிர்ந்து கொண்டார்.
डर के आगे आज़ादी। #Azadipic.twitter.com/WGHw3Q7Ndo

— Congress (@INCIndia) February 8, 2019

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.