Breaking News
உக்ரைனில் இருந்து வரும் கர்நாடகா மாணவரின் உடல், மருத்துவ படிப்புக்கு தானமாக வழங்கப்படும்- தந்தை பேட்டி
பெங்களூரு:
உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர் நவீனில் உடல் உக்ரைனில் இருந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெங்களூரு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளதாக என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள நவீனின் தந்தை சங்கரப்பா, தமது மகன் உடல் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன் பின்னர், மருத்துவப் படிப்புக்காக தனது மகன் உடலை தாவணகெரேவில் உள்ள எஸ்.எஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் சென்று உயிரிழந்த மாணவரின் உடல் மருத்துவப் படிப்புக்காக தானமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.