Breaking News
தி.மு.க., அரசு: ஓராண்டு பயணம் எப்படி…

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு முடிந்தது. இவரது அரசின் முக்கிய அம்சங்கள்.

2021 மே 7: தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு. ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ. 2000 நிவாரணம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிக்கு இலவச சிகிச்சை

உட்பட ஐந்து முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

மே 16: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு.

மே 30: கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஜூன் 3: ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரண்டாவது தவணை ரூ. 2000 வழங்கும் பணி துவக்கம்.

ஜூன் 17: முதல்வரான பின் முதன்முறையாக டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

latest tamil news

ஜூன் 21: தமிழக சட்டசபை முதல் கூட்டம் துவக்கம்.

ஆக. 2: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு.

ஆக. 13: தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்.

ஆக. 14: தேர்தல் வாக்குறுதி படி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்.

ஆக. 26: இன்ஜினியரிங் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

அக். 27: ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கினார்.

நவ. 2: கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.

டிச. 3: அரசு பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாளில் தேர்ச்சி கட்டாயம் என அரசாணை வெளியீடு.

டிச. 18: விபத்தில் காயம் அடைந்தவருக்கு முதல் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கும் ‘இன்னுயிர் காப்போம்’ மருத்துவ திட்டம் துவக்கம்.

டிச. 23: பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக ‘மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

பிப். 22: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க., கைப்பற்றியது.

மார்ச் 8: துாத்துக்குடியில் ரூ. 4755 கோடியில் அறைகலன் (பர்னிச்சர்) பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்.

மார்ச் 18: அரசு பள்ளியில் படித்து கல்லுாரியில் சேரும் மாணவிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிப்பு.

மார்ச் 20: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். விவசாயகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 5157 கோடி நிதி ஒதுக்கீடு.

மார்ச் 24: முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக துபாய் சென்றார்.

மார்ச் 31: டில்லியில் பிரதமர் மோடி – தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.

பிப். 2: டில்லியில் தி.மு.க., அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஏப். 8: மக்கள் நலப்பணியாளர் 12 ஆயிரம் பேருக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு முடிவு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.