தென்திருப்பேரை அரசு டாஸ்மாக் கடை வரும் 24ம்தேதிக்குள் வேறு இடத்தில் மாற்றப்படும் – பாஜக சார்பில் நடக்கவிருந்த போராட்டம் வாபஸ்

தென்திருப்பேரை அரசு டாஸ்மாக் கடை வரும் 24ம்தேதிக்குள் வேறு இடத்தில் மாற்றப்படும் – பாஜக சார்பில் நடக்கவிருந்த போராட்டம் வாபஸ்

 

தென்திருப்பேரை அரசு டாஸ்மாக் மதுபான கடையை வரும் 24ம்தேதிக்குள் வேறு இடத்தில் மாற்றப்படும் என சமாதான கூட்டத்தில் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பாஜக சார்பில் நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

தென்திருப்பேரை அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பாஜக உள்ளாட்சி பிரிவு மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இப்பிரச்சனை தொடர்பாக திருச்செந்தூர் ஆர்டிஓ குரு சந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்தது.
இக்கூட்டத்தில், திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தரா‍ஜ், ஏரல் தாசில்தார் கோபால், தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்செந்தூர் – திருநெல்வேலி மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையை வரும் 24ம்தேதிக்குள் வேறு தகுதியான இடத்தில் மாற்றம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் உதவி மானேஜரால் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு 24ம் தேதிக்குள் இடத்தை மாற்றாவிட்டால் 25ம் தேதிக்குள் அரசு டாஸ்மாக் மதுபான கடை மூடப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதனையேற்று பாஜக உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாநில மகளிரணி பொது செயலாளர் நெலலையம்மாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமரன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், ஆழ்வை ஒன்றிய தலைவர் குமரேசன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, நகர துணைத் தலைவர்கள் சண்முக ஆனந்த, ரமேஷ், நகர செயலாளர் கார்த்திசன், காளீஸ்வரி, பால் வண்ணன், ஜெய் சிங் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: திருச்செந்தூர் சதீஷ்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )