சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக மனோகரன் பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக மனோகரன் பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக மனோகரன் பொறுப்பேற்றார். நாகர்கோவில் நக்சலை சிறப்பு பிரிவில் பணியாற்றி வந்த இவரை திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி நேற்று மாலை (14.02.2024) சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 1999 ஆம் ஆண்டு நேரடி எஸ்.ஐயாக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் திறம்பட பணியாற்றி 2010ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )