
தூத்துக்குடி: ஆத்தூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரட்சனையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கொழுவைநல்லூர் பகுதியைச் சேர்ந்த வன்னியலிங்கம் மகன் லிங்கராஜா (34) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மணிகண்டராஜா (36) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13.02.2024 அன்று லிங்கராஜா கொழுவைநல்லூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டராஜா மற்றும் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சங்கரவேல் (52) ஆகிய இருவரும் சேர்ந்து லிங்கராஜாவிடம் தகராறு செய்து அவரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து லிங்கராஜா அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வகுமார் வழக்கு பதிவு செய்து மணிகண்டராஜாவை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றொரு எதிரியான சங்கரவேலை தேடி வருகின்றனர்.