
தூத்துக்குடி: ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் திருக்கோயில் வளாகத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பேரூராட்சி சார்பாக இலவச கழிப்பறை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் அமைந்துள்ள சோமசுந்தரி அம்பாள் திருக்கோவிலுக்கு வரும் பாதையாத்திரை பக்தர்களுக்கு பயன்படும் வகையில், பேரூராட்சி சார்பாக, இலவச கழிப்பிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.கே.கமால்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பேரூராட்சி பொறியாளர் ஆவுடையப்பன் 11வது வார்டு உறுப்பினர் : சங்கரேஸ்வரி ராம்குமார் முன்னிலை வகித்தனர். மேலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் செய்தியாளர் இப்ராஹிம்
CATEGORIES மாவட்டம்