தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி திருவைகுண்டம் வட்டம் சிங்கத்தாக்குறிச்சியில் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ள சமுதாய சுகாதார வளாகத்தில் பராமரிப்புப் பணிகள், முறையான குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்தும், சிங்கத்தாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகம், சிங்கத்தாக்குறிச்சி துவக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவுகள், அதன் தரம், பொருட்களின் இருப்பு, பயன்பெறும் மாணவர்கள் மற்றும் வருகைப் பதிவுகுறித்தும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க நியாயவிலைக் கடை, ேமலும் திருவைகுண்டம் வட்டம் ஆலந்தா முதல் (கடம்பூர், புளியம்பட்டி மற்றும் தெய்வச்செயல்புரம் சாலை) சிங்கத்தாக்குறிச்சி செல்லும் 3.2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.4.40 கோடி செலவில் நடைபெற்று வரும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், இருவழிச் சாலை அமைக்கும் பணிகளையும், சிங்கத்தாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், திருவைகுண்டம் வட்டம் காசிலிங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள நிலை குறித்தும், கிள்ளிகுளம் தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்று உற்பத்திக்கான தென்னை நெத்து நடவு செய்யும் பணிகள் மற்றும் தென்னை நாற்று பராமரிப்புப் பணிகளையும், கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள செயல்பாடுகள் குறித்தும், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தும், வடக்கு வல்லநாடு வருவாய் கிராமம், சேதுராமலிங்கபுரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.430 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 363 குடியிருப்புகளுக்கான (6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள) கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், கொங்கராயக்குறிச்சி முதல் மணக்கரை வரை செல்லும் 1.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.91 கோடி செலவில் நடைபெற்று வரும் தற்காலிக சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், கருங்குளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணிகளையும், திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டும், திருவைகுண்டம் வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பின்னர் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிசெய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்து, 12 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் உத்தரவுகளையும், வரன்முறை பட்டாவும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியும், வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வாழை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் வாழை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய இலை, தண்டு, பூ ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக உற்பத்தி செய்யும் பணிகளையும் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை மரத்தினை இன்னும் அதிகப்படியாக கொள்முதல் செய்து, வேளாண் வணிகத்தை பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை பார்வையிட்டு, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவின் தரம் ஆகியவற்றை குறித்து மாணவியர்களுடன் கலந்துரையாடினார். திருவைகுண்டம் உப மின் நிலையத்தில் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்தல், நுகர்வோர்களிடமிருந்து வரக்கூடிய புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், புதிய மின் இணைப்புகள் விரைந்து வழங்குதல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும் இதுபோன்ற பல்ேவறு நிகழ்வுகளை கலெக்டர் ெலட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் ராஜா, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ரவிக்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பொற்செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சாந்திராணி, கலெக்டாின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, செயல் அலுவலர் (வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருவைகுண்டம்) எழில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுந்தர்ராஜன், வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், செயற்பொறியாளர் (தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தூத்துக்குடி) சின்னதுரை, உதவி செயற்பொறியாளர் உஷா தேவி, திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், உதவிப் பொறியாளர் ராஜாத்தி, சாலை ஆய்வாளர் இசக்கி ராஜா அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )