
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தனராஜ் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்
தூ த்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தனராஜ் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்வில், அருட்சகோதரி முனைவர் முதல்வர் ரூபா தலைமை வகித்தார். துணை முதல்வர் மதுரவல்லி மற்றும் முனைவர் ரகு ஆண்டனி துணைத்தலைவர் (ஆங்கிலத்துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், தன்ராஜ் மருத்துவமனை மருத்துவக்குழு சிறப்பாக செயல்பட்டது.
இந்த முகாமினை கல்லூரி உதவி பேராசிரியர் மாரித்தங்கம் சுலோசனா, முனைவர் ஷெரின், உணவு மற்றும் உடல் நலக்குழு மாணவிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தி& புகைப்படங்கள்- ரவி
CATEGORIES மாவட்டம்