
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் “கலாச்சார பாதைகளில் பெண்களின் பங்கு” தேசிய கருத்தரங்கு
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்று துறையில் ஒரு நாள் 23.2.20 24. தேசிய கருத்தரங்கம் “கலாச்சார பாதைகளில் பெண்களின் பங்கு* என்ற தலைப்பில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் பார்வதி மேனன், வரலாற்று துறை உதவி பேராசிரியை அனைத்து புனிதர்கள் கல்லூரி திருவனந்தபுரம் சிறப்புரை ஆற்றினர். கல்லூரி முதல்வர்அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னான்டோ, துணை முதல்வர் அருட் சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், சுயநிதி பிரிவு இயக்குனர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோர் வாழ்த்துரையுடன் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பல்வேறு கல்லூரியிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி & புகைப்படங்கள் – ரவி
CATEGORIES மாவட்டம்