தூத்துக்குடியில் தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அரசு வாகனம் மோதி ஒருவர் பலி

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அரசு வாகனம் மோதி ஒருவர் பலி

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் தவமணி, கூலித் தொழிலாளியான இவர் இன்று பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். மறவன் மடம் அருகே வரும்போது சிப்காட்டில் நடைபெற்ற மின்சார கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முடித்து விட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். தமிழக முதல்வரின் காரினை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அரசு வாகனங்கள் சென்றுள்ளன. இதில் தமிழக அரசு பணி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இன்னோவா கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மார்டின் தவமணி இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கூலித்தொழிலாளியான மார்ட்டின் தவமணி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான மார்டின் தவமணி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் தமிழக முதல்வரின் காண்வாயில் வந்த அரசு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )