ஒற்றை ஆள் காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றதால் தேசிய பேரியக்கத்திற்கு எந்த இழப்பும் இல்லை -அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் பரப்பாடி  காமராஜ் கடும் கண்டனம்

ஒற்றை ஆள் காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றதால் தேசிய பேரியக்கத்திற்கு எந்த இழப்பும் இல்லை -அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் பரப்பாடி காமராஜ் கடும் கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் விஜயதரணி. இவர்

திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதனை கண்டிக்கும் வகையில்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வழக்கறிஞர் பரப்பாடி காமராஜ், பா.ஜ.க-வுக்கு தாவிய விஜய்தரணிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்‌

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

ஒற்றை ஆள் தான் விஜயதரணி அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றதால் இந்த தேசிய பேரியக்கத்திற்கு எந்த இழப்பும் இல்லை புத்துயிர் பிறந்தது எனலாம் விளவங்கோடு தொகுதி மக்கள் ஆதரவோடும், காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆசியோடு
2011, 2016, 2021 என மூன்று முறை காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினராக விஜயதரணி வலம் வந்தார். அப்படி அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்தார். காங்கிரஸ் கட்சி என்ற ஒரே அடையாளத்தை தவிர விஜயதரணிக்கு வேறு ஒரு தகுதியும் கிடையாது. இவருக்கு திராணி இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் மீண்டும் விஜயதரணியை போட்டியிட சொல்லுங்கள் அப்போது தெரியும் விஜயதரணி ஒரு வெத்து வேட்டு என்று என்
தெரிவித்ததோடு விஜயதரணியை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் பரப்பாடி காமராஜ் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )