தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவிகளின் தனித்தன்மை மற்றும் கலை உணர்வை வெளிபடுத்தும் கலை நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவிகளின் தனித்தன்மை மற்றும் கலை உணர்வை வெளிபடுத்தும் கலை நிகழ்ச்சி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் (தன்னாட்சி), ஆண்டுதோறும் நடைபெறும் மரியன்னை கலை விழா, இவ்வாண்டு பிப்ரவரி 29 முதல் மார்ச் 2 வரை நடைபெறுகிறது. இதில் மாணவர்களின் தனித்தன்மை மற்றும் கலை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று கல்லூரி வளாகத்தில் இனிதே ஆரம்பமானது. கணினி பேராசிரியரும், மாணவர் பேரவை ஆலோசகருமான முனைவர் சே.அனிலா மயிலி வரவேற்புரை வழங்கினார். இளைஞர்களிடையே கலை மற்றும் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தொடக்க விழாவில் செயலாளர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெசி பெர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எஸ். குழந்தை தெரஸ், சுயநிதி பிரிவு இயக்குனர் அருட்சகோதரி ஜோஸ்பின் ஜெயராணி, தேர்வாணையர் முனைவர் புனிதா தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநரும், தூத்துக்குடி சிஐஐ தலைவருமான, வெயில ராஜா கலந்து கொண்டார். அவர் தனது உரையில், கலைத் திறன்களை வளர்க்க கல்லூரி எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டினார், மேலும் மாணவர்கள் படிப்புமட்டுமல்லாமல் மற்ற திறமைகளையும் வளர்க்கவேண்டுமென வலியுறுத்தினார்.
வாழும் கலைகளால் வளரும் இளம் தலைமுறைக்கு இறைமொழியினை நிலைக்காட்சியின் வழி உணரவைத்தார்கள்
நன்றியுரையை வேதியியல் துறை பேராசிரியை மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் முனைவர் பர்வீன் சுல்தானா முன்மொழிந்தார். உற்சாகமாக நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

செய்தி & புகைப்படங்கள் – ரவி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )