
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட வேண்டும்- திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் விருப்ப மனு வழங்கினார்
இந்தியாவின் 17வது பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் திமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு திமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆலோசனையின்படி சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி மீண்டும் போட்டியிட வேண்டுமென்று தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விருப்பமனு வழங்கினார்கள்.