முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னையில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னையில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களிலும், பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி வணங்கினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகர சிறுபாண்மை அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் உடனிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )