தூத்துக்குடியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

தூத்துக்குடியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி மாரீஸ்வரி (25). இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரேம்குமார் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை மாரீஸ்வரி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் மாரீசுவரியை தாக்கி உள்ளார்.

இதனை தடுக்க முயன்ற அந்த பகுதியை சேர்ந்த முனீஸ்வரன், நாகூர்கனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் காயம் அடைந்த மாரீஸ்வரி உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )