
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் விருப்ப மனு.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் விருப்ப மனு அளித்தார்.
நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட
வேண்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சார்பில் சென்னை தலைமை கழகத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் விருப்ப மனு அளித்தார்.
நிகழ்வில், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சரவணபெருமாள் மற்றும் மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் சாம்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
CATEGORIES அரசியல்