
நிலம் தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
தூத்துக்குடி தெர்மல்நகர், கேம்ப்-1 பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராமஜெயம் (39). இவர் தபால்தந்தி காலனி 12 தெருவைச் சேர்ந்த விவேகானந்தா (70) என்பவரிடம் 5 சென்ட் நிலம் வாங்குவதற்காக தவணை முறையில் .50 ஆயிரம் பணம் செலுத்தினாராம். பணத்தை வாங்கிய பிறகு விவேகானந்தா நிலத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ராமஜெயம், நிலத்தை தராவிட்டால் பணத்தை திருப்பித்தருமாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் ரூ.7 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதம் .43 ஆயிரத்தை திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்