
தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டசத்து ஆகியவற்றை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பின்னர், அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஜான் ஜீகன் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதா முருகேசன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர்;, முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் ரவி, பிரவீன்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, விஜயலெட்சுமி, கந்தசாமி, கண்ணன், ராஜேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாநகர சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் ஆனந்த கபிரியேல் ராஜ், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், வட்ட செயலாளர்கள் மூக்கையா, பாலகுருசாமி, சுரேஷ், சிங்கராஜ், சுப்பையா, மனோ, கங்காராஜேஷ், செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், செல்வம், புஷ்பராஜ், துரை, பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் சூர்யா, மகளிரணி ரேவதி, மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.