உண்மையா, பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வாயால் வடை சுட்டு வருகிறார் – அண்ணாமலை மீது கீதாஜீவன் பாய்ச்சல்

உண்மையா, பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வாயால் வடை சுட்டு வருகிறார் – அண்ணாமலை மீது கீதாஜீவன் பாய்ச்சல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு அப்போதுதான் செய்தி வரும் அதனால் அப்படி பேசி வருவதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

போலியோ சொட்டு மருந்து இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தாகும்.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு, அப்போதுதான் அவருடைய செய்தி வரும், அதனால் அப்படி பேசி வருகின்றார். தோல்வி பயத்தில் அண்ணாமலை உளறி வருகின்றார். பேசுவது உண்மையா, பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டு,.
உண்மையே பேசாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டு வருகிறார் என அண்ணாமலை மீது அமைச்சர் கீதாஜீவன் கடும் குற்றச்சாட்டு கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )