
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் தங்கமுத்து மகன் கருப்பசாமி (26). இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கருப்பசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீடு புகுந்து பட்டப்பகலில் வாலிபரை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் ஏற்படுத்தி உள்ளது.
CATEGORIES மாவட்டம்