
கப்பலுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் கப்பலில் மாயம்- கண்டுபிடித்துத் தரக்கோரி கண்ணீர் மல்க தூத்துக்குடி கலெக்டரிடம் தந்தை மனு
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்த வாலிபர் கப்பலுக்கு வேலைக்கு சென்றவர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதியிடம் பெற்றோர் மனு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டிணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் மீன்வர். இவரது மகன் ஆல்டிரின் சேவியர் (வயது – 32) இவர் முப்பையில் உள்ள மஸ்க் பிலீட் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி இந்திய பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி சாந்தா குரு என்ற கப்பல் எண் 9444742 – I.M.0ல் வேலை செய்து வருகிறார். 2.3.24 அன்று அவரது வீட்டுக்கு போன் வந்துள்ளது, அதில் உங்கள் மகன் ஆல்டிரின் சேவியரை கப்பலில் இருந்து காணவில்லை என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். ஆல்ட்டிரின் சேவியர் எப்படி காணாமல்போனார். கப்பலில் இருந்து எங்கு போனார். அவருக்கு என்னவாயிற்று என்ற விபரம் எதுவும் சொல்லவில்லை எனவே, தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியிடம் காணமல் போன வாலிபர் ஆல்ட்டிரின் சேவியரின் தந்தை சேவியர் கண்ணீர்மல்க மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, தந்தை சேவியர். மற்றும் குடும்பத்தினருக்கு உங்களது மகனை கண்டுபிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறினார்.