
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு பெண்கள்- மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெரிய செல்வநகர் இசேவை மையத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு செயல் அலுவலர் ராதா தலைமை வகித்தார். தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஜானி பேடாகிருபன், மகளிர் கூட்டமைப்பு தலைவர் அந்தோணிபிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மகளிர்க்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறந்த முறையில் பணியாற்றிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கும் நோட்புக் சீருடை வழங்கி திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணக்குமார் பேசுகையில் “அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நமது மாவட்டத்திற்கு பணியாற்றும் கனிமொழி எம்.பி., முதலமைச்சரின் தங்கை மகளிர்க்கென்று பல்வேறு சலுகைகளை வழங்கிய அரசு திமுக தான், 1989ல் மகளிர் சுய உதவிக்குழு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு வங்கி கடன்கள் வழங்கப்பட்டன. இதை 2006ல் மேலும் விரிவுபடுத்தி சிறந்த முறையில் பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்டங்களில் பேசியதுண்டு. தற்போது கூடுதலாக வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இந்த ஊராட்சி பகுதியில் சுமார் 100 குழுக்கள் வருகின்றன. உங்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை இந்த அரசு மட்டுமின்றி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளமும் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலோடு அரசின் திட்டங்களும் கிடைக்கப் பெறுகின்றன. மாப்பிள்ளையூரணி ஊராட்சியை பொறுத்தவரை அனைத்து பகுதியிலும் உள்ள மக்கள் நன்மை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறோம். இனி வரும் காலங்களிலும் உங்கள் நலன் தான் முக்கியம் என்று நாங்கள் பணியாற்றுவோம். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியமானது. வரும் காலங்களிலும் எல்லோரும் இந்த அரசுக்கும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் இந்தியன் வங்கி மேலாளர் டிக்சன் நீதிராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சுபா, யூனியன் வங்கி உதவி மேலாளர் தமிழ்ச்செல்வி, அஞ்சல் துறை அலுவலர் முத்துமாயி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஜே.சு.ராஜா, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவிக்குழுக்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பேச்சுப்போட்டிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் கூட்டமைப்பு செயலாளர் லூர்து பாக்கியம், பொருளாளர் ஜானகி, இணைச்செயலாளர் லட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் அந்தேதாணி ரோஸ்ஸீன், மல்லிகா, பியூலா, பாக்கியமணி, முத்துக்கனி, மோயி ரோஸ், அம்புரோஸ், மோயி, ஆரோக்கிய மோயி, முத்துக்கனி, அங்காளஈஸ்வாயி, அசுந்தாஜோதிலி, குறும்சம்மாள் மாய கலையரசி, ஆகியோர் செய்திருந்தனர்.