வாயால் வடை சுடும் மோடி: ஓன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடியில் வடை வழங்கி திமுகவினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்

வாயால் வடை சுடும் மோடி: ஓன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடியில் வடை வழங்கி திமுகவினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்

தூத்துக்குடி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே பார்வையுடன் பார்க்காமல் பாரபட்சம் காட்டி பிஜேபி ஆளும் மாநிலத்திற்கு கூடுதல் நிதியும், தன்னோடு இணக்கமாக இருக்கும் மாநில அரசுக்கு சில சலுகைகளும், பிஜேபிக்கு எதிரான கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு நிதிஓதுக்கீடு துறை அந்த மாநிலத்திற்கு எதிரான திட்டங்களையும் சட்டங்களையும் அமுல்படுத்த வலியுறுத்தி நெருக்கடி வழங்கப்பட வேண்டும். வேண்டிய நிதியை கூட வழங்காமல் புறக்கணிப்பது கடந்த கால தேர்தலின்போது கருப்பு பணத்தை ஒழித்து ஓவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் வழங்குவேன். ஓராண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன். புதிய தொழிற்சாலைகள் உருவாக்கி அனைவரின் வாழ்விலும் ஒலியேற்றுவேன் என்று பல வாக்குறுதிகளை வழங்கிய மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுமையான ஆதரவு அளித்து ஓன்றிய அரசு சார்ந்த பொது நிறுவனங்களை விற்பனை செய்வது தோதல் பத்திரம் மூலம் கட்சிக்கு கோடிக்கணக்கான பணம் வசூலிப்பது என பல முறைகேடுகளில் ஈடுபட்டுக்கொண்டு தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் போல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறினர். வாயால் வடை சூடும் ஓன்றிய அரசை கண்டித்து அதிலும் குறிப்பாக மோடியின் செயல்களை கண்டித்து,

மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான ராஜா அறிவுறுத்தலின்படி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் ஊமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில், பழைய அண்ணா பேருந்து நிலையம் முன்பு மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் பக்கோடா விற்று பிழைத்து கொள்ளுங்கள் என்று கூறிய செயல்களையும் கண்டித்து வாயால் வடை சூடுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் பொதுமக்களுக்கு வடை மற்றும் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி திமுக ஆட்சி பதவியேற்ற நாளிலிருந்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சரின் செயல்திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள மக்களுக்கான திட்டங்களையும் எடுத்துரைத்தனர்.

, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, நாகராஜன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர் கந்தசாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, கங்காராஜேஷ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாதுரை, ஹாிஹரன், சந்தன முனீஸ்வரன், அஸ்வின் துரை, மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, தகவல் தொழில்நுட்ப அணி மார்க்கிஸ்ட்ராபர்ட், சுரேஷ்குமார், மனோராஜ், ஆவுடையப்பன், உமாமகேஷ், செம்புலிங்கம், பரத், சக்தி, ரஞ்சித், சுப்பிரமணியன், வட்டப்பிரதிநிதி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )