
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட எஸ்பி-யிடம் வாழ்த்து பெற்றனர்
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்- மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகளிர் காவல்துறையினர் மற்றும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியார்கள் என பெண் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் இன்று (08.03.2024) மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மகளிர் அமைச்சுப்பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி அனைத்து வகையான செல்வங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

