
காமராஜர் அமுதசுரபி பெண்கள் இயக்கம் சார்பில் உலக மகளிர் தினவிழா- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பங்கேற்பு
மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், பேய்குளம் அருகே பழனியப்பபுரத்தில் சமுதாய நலக்கூடத்தில் வைத்து காமராஜர் அமுதசுரபி பெண்கள் இயக்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி காமராஜர் அமுதசுரபி பெண்கள் இயக்கத் தலைவர் ஜெய பார்வதி சுடலை செல்வின் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் சட்ட ஆலோசகர் சிவ மீனா ஐகோர்ட் ராஜா வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன் மகளிர் தினத்தின் சிறப்புகளை விளக்கி அதிமுகவின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலம் தொட்டு எடப்பாடி பழனிசாமி வரை மகளிர் மேம்பாட்டிற்காக செய்த திட்டங்களை எடுத்துரைத்தும் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசினார்.
காமராஜர் அமுதசுரபி பெண்கள் இயக்கச் பொருளாளர் எஸ்தர் நல்லதம்பி, செயலாளர் பெண்கள் முன்னேற்றம் ராணி நாடார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இயக்க ஒருங்கிணைப்பாளர் சாந்தி கோயில் ராஜ் வரவேற்பு பாடல் பாடினார். இந்நிகழ்வில் இயக்கத் துணைத் தலைவரும் குறப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான சகாய சுமதி பட்டுத்துரை, துணை செயலாளர் பபிதா குமார், துணை பொருளாளர் ஜெயஜோதி துரைப்பாண்டி, சட்ட ஆலோசகர் பேச்சியம்மாள் ஜெயராமன், நிர்வாக உறுப்பினர்கள்
சிவகாமி சுப்பிரமணியன், தங்கம் செல்வின், சித்திரைசெல்வி செல்வசிங், எலிசபெத் செந்தூர்பாண்டி, சரஸ்வதி கோயில்பிள்ளை,ரேவதி கோசல்ராம் பனிதா,கோபாலகிருஷ்ணன், விஜயலெட்சுமி ஆனந்த், அதிமுகவின் சார்பில் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், ஒன்றிய கழகச் செயலாளர்கள் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் செம்பூர் ராஜ் நாராயணன், பேரூராட்சி கழக செயலாளர் ஆறுமுக நயினார், அம்புரோஸ் கிப்ட்டன், பேய்குளம் முத்தையா, வார்டு கவுன்சிலர் முத்துராமன், ரவி, ஜெபஸ்டின், பாலஜெயம் , உள்ளிட்ட பெருந்திரளான மகளிர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

