
உலக மகளிர் தின விழா- ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சிப்காட் தொழில் பூங்காவில் திட்ட அலுவலர் ஜோன் மேரி செல்வராணி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுப் பணியை துவக்கி வைத்தார். லியோ அண்டோ முன்னிலையில் வகித்தார்.
இதில் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி, லீடு டிரஸ்ட் இயக்குனர் எஸ் பானுமதி, சமூக ஆர்வலர் பாலமுருகன், மதர் தெரசா இன்ஜினியர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட பல கலந்துள்ளனர்.

CATEGORIES மாவட்டம்

