
பைக் விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் உடலுக்கு மாவட்ட எஸ்பி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மோகன் சாலை விபத்தில் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் மோகன் (43), நேற்று (12.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் மீளவிட்டான் 4ம் கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி கிழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு மீளவிட்டான் சில்வர்புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அன்னாரது உடலுக்கு இன்று (13.03.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

