சாத்தான்குளம் அருகே ஐ.டி.ஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே ஐ.டி.ஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் வசந்தகுமார் (வயது 17). சாத்தான்குளம் அருகே உள்ள ஐ.டி.ஐ- மில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுமுறையில் வீட்டில் வசந்தகுமார் இருந்துள்ளார். தாய் பஞ்சவர்ணம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிபோது வசந்தகுமார் வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தான்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுத்தொடர்பாக தாய் பஞ்சவர்ணம் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )