
தேர்தல் அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு திருச்செந்தூர் ஆர்.டி.ஒ சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது
மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மனுத்தாக்கல் உட்பட பல்வேறு பணிகளில் தீவிரமாக உள்ளனர். பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள் என பலரும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
215 திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உள்ளடங்கிய 36 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருச்செந்தூர் செயல்முறைகள் சுகுமாறன் முன்னிலையில், பயிற்சி வகுப்பு 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்ட வகுப்பு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற்றது
இவர்களுக்கு மின்னனு வாக்கு எந்திரங்களின் செயல்பாடு, அவற்றை கையாளும் முறை, தேர்தல் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தேர்தல் தேர்தல் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களை எவ்வாறு பொருத்த வேண்டும். கட்டுப்பாட்டு கருவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.இதற்காக மாதிரி வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
நிகழ்வில் தாசில்தார் பாலசுந்தரம், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கண்ணன் ஆகியோர் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.