தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு ‌

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு ‌

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் 36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திவேஷ் ஷெஹரா (Mr.Divesh Sehara) பொதுத்தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கி தேர்தல் பணிகளை பார்வையிட்டு வருவார்.

தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் செலவினங்கள், தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான புகார்கள் குறித்து புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 8925921303 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திவேஷ் ஷெஹரா-விடம் தெரிவிக்கலாம்.

மேலும் தேர்தல் பொது பார்வையாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்புபவர்கள் மதியம் 03.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வ.உ.சி.ரோடு காசி கடை பஜார், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கூடுதல் அரசு சுற்றுலா மாளிகை அறை எண்:1ல் சந்திக்கலாம்.

மேற்காணும் தகவலை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )