
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகிகளிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகாித்தார்
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகிகளிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்தார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இதனையடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலாளர் நீகர் பிாின்ஸ் கிப்ட்ஸன், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உயர்நிலை மேல்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகளில் மேலாளா் பிரேம்குமார் ராஜாசிங், ஆகியோரை சந்தித்து வாக்கு சேகாித்து அவர்களிடம் கூறுகையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த எனக்கு ஆதரவு தர வேண்டும். எல்லா வகையிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு முழுமையாக என்னை அர்ப்பனித்துக்கொண்டு பணியாற்றுவேன் என்று கூறினார்.
அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகா், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்