தேர்தலுக்கு பின்னர் மும்முறை தலாக் முறையை தடைசெய்ய நடவடிக்கை – மத்திய அரசு
இஸ்லாமிய வழக்கப்படி “தலாக்’ என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்த மத்திய அரசும் இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ‘மும்முறை தலாக்’ விவகாரம் பெண்களுக்கு எதிரானது என்பது மத்திய அரசின் வாதமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய அலகாபாத் ஐகோர்ட்டு, இந்த முத்தலாக் முறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்ததது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாம் தனி நபர் சட்ட வாரியம் ஏற்கிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் மும்முறை தலாக் முறையை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார். 5 மாநில சட்டசபைத் தேர்தல்களை அடுத்து மும்முறை தலாக் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டு உள்ளார். சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தெளிவான நிலையை வெளிப்படுத்தும் தைரியம் உள்ளாதா என்றும் பேசிஉள்ளார். காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்,
பிரச்சினையானது மதம் தொடர்பானது கிடையாது, பெண்களின் கண்ணியம் மற்றும் மதிப்புடன் தொடர்புடையது. மதவழிபாடு நம்பிக்கைக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது, சமூக தீய்மைகள் இணைந்து இருக்கமுடியாது. உத்தரபிரதேச மாநில தேர்தலுக்கு பின்னர் மத்திய அரசு மும்முறை தலாக் முறையை தடைசெய்ய முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.
நன்றி : தினத்தந்தி