
தூத்துக்குடியில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி தங்கச் செயின் பறித்துச் சென்று தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் கைது
பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி ஆயுதப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ், இவர் தனது காதலியுடன் கடந்த 8ம் தேதி முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார்.
அங்கிருந்த ஒரு வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்து அவர்களிடம் காண்பித்து, இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்புவேன் என மிரட்டி உள்ளார். மிரட்டலுக்கு பயந்த காதல் ஜோடி செய்வதறியாது திகைத்து நின்று உள்ளனர். இதையடுத்து, அந்த வீடியோ மற்றும் போட்டோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலி வேண்டும் என கூறி அதை அபகரித்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாலகணேஷ் தனது நண்பர்களுடன் மறுநாள் அதே முத்துநகர் கடற்கரை பகுதிக்கு தன்னிடம் செயினை பறித்த நபர் அங்கு இருக்கிறாரா என்று தேடியுள்ளனர். அப்போது, செயினை பறித்த அதே நபர் அங்கு நின்று கொண்டு இருப்பதை பார்த்த பாலகணேஷ் மற்றும் நண்பர்கள் அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சம்பவம் குறித்து கூறி புகார் அளித்துள்ளார் பாலகணேஷ்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் இருசக்கர வாகனம் யாருடையது என போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இருசக்கர வாகனம் நெல்லையில் காணாமல் போன என கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் ராஜ் என்பதும், டென்னிஸ் ராஜ் மணிமுத்தாறு பாட்டாளியனில் காவலராக இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து அடைப்பாக போலீஸார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களாக தலைமறைவாக இருந்த டென்னிஸ் ராஜாவை வடபாகம் போலீசார் இன்று கைது செய்யப்பட்டனர்.